Categories
சினிமா தமிழ் சினிமா

“எல்லா கேரக்டரும் ஓகே தான்” இனி வருடத்திற்கு 5 படங்களில் நடிப்பேன்…. நடிகர் கருணாஸின் திடீர் முடிவு….!!!!

தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ். இவர் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் தற்போது ஆதார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சர்வதேச பட விழாக்களில் 19 விருதுகளை பெற்றுள்ள நிலையில், வருகிற 23-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது‌. இந்த படத்தை அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் போன்ற படங்களை இயக்கிய ராம்நாத் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ரித்விகா ஹீரோயின் ஆக நடிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஆதார் படம் குறித்து நடிகர் கருணாஸிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு படம் நன்றாக வந்துள்ளது என்றார். அதன்பிறகு நடிப்புக்கு இனி அதிக முக்கியத்துவம் கொடுக்கப் போவதாகவும், நல்ல கேரக்டர்களில் வருடத்திற்கு 4 அல்லது 5 திரைப்படங்களில் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும் கதாநாயகன், குணசத்திரம் மற்றும் காமெடி உள்ளிட்ட அனைத்து வேடங்களிலும் நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |