தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற திட்டம் தவறானது என்று கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு வரை கூட செல்ல தயார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஸ்டாலின் மிகுந்த சிரமங்களுக்கு இடையே தான் முதல்வராகி இருக்கிறார். பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தில் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சொன்னதும் ஸ்டாலின் பின்வாங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.