Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எல்லா சொத்துக்களும் போய்விடும்…. பயந்த கோடீஸ்வரர்…. செய்த காரியம்…!!

கோடீஸ்வரர் ஒருவர் பெண் குழந்தையை விலைக்கு வாங்கிய சம்பவம் அறிந்து காவல்துறையின் விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ஹாஜி முஹம்மது – ஆமினா பேகம். இவர்களுக்கு 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஹாஜி ஓட்டல் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து ஆமினாவின் பக்கத்து வீட்டில் வசித்த சலவைத் தொழிலாளி கண்ணன் என்பவர் நீங்கள் ககொரோனாவால் வருமானம் இன்றி கஷ்டப்படுகிறீர்கள். அதனால் நான்காவது பெண் குழந்தையை விற்று விடுங்கள் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளார்.

இந்நிலையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையுடன் ஆமினாவை காரில் ஈரோட்டுக்கு அழைத்து சென்ற கண்ணன், அங்கு ஒரு பெண்ணிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கி மீனாவிடம் கொடுத்துள்ளார். பின்னர் வெற்றுப் பத்திரத்தில் ஆமினாவிடம்  கண்ணன் கையெழுத்து வாங்கியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பிறந்த குழந்தை குறித்து கேட்டபோது சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில்  இது தொடர்பாக விசாரித்த காவல்துறையினர் கூறுகையில், “திருப்பூர் மாவட்டம் அவினாசியைச்  சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவருக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தன்னுடைய சொத்துக்களுக்கு வாரிசு இல்லாமல் போய்விடும் என்று எண்ணிய கோடிஸ்வரர் மற்றும் அவரது மனைவி ஆமிகாவின் பெண் குழந்தையை கண்ணன் மூலம் விலைக்கு வாங்கியுள்ளனர். இதையடுத்து கோடீஸ்வரரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |