உலக நாடுகள் அனைத்திற்கும் சமமாக தடுப்பு மருந்து கிடைக்க பல்வேறு அமைப்புகள் சேர்ந்து கோவாக்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது உருவாக்கியுள்ளது
கோவாக்ஸ்(COVAX) என்பது கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு சமமாக பகிர்ந்து அளிப்பது ஆகும். இது உலகின் மிகப்பெரிய தடுப்பூசி கொள்முதல் மற்றும் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆகும். இந்தத் திட்டத்தை தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள்(UNICEF), உலக வங்கி(WORLD BANK) போன்றவைகளுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு(WHO) மற்றும் தொற்றுநோய் தயாரிப்பு கண்டுபிடிப்புக்கான கூட்டணி(GAVI) ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
உலக நாடுகளின் சுமார் 20 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடுவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் . இதில் கொரோனா தடுப்பூசி போட முடியாத நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளும் அடங்கும். கோவாக்ஸ் திட்டத்தில் நாட்டின் மொத்த வருமானம் தனிநபர் வருமானம் 4000 டாலருக்கு குறைவாக இருக்கும் நாடுகளும் இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்குகாக உருவாக்கப்பட்டதாகும். இந்தத் திட்டத்திற்கான மொத்த நிதி இலக்கு சுமார் 6.8 பில்லியன்அமெரிக்க டாலர்களாகும். இந்த திட்டத்திற்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஓரளவு உயர் மற்றும் நடுத்தர வருமான நாடுகளிலிருந்து திரட்டப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு அமெரிக்கா இரண்டு பில்லியன் டாலர்கள் வழங்குவதாகவும் கூறியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 550 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்தியாவின் மக்கள் தொகையில் 8.52 சதவீதமாகும்.கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெற்ற உலகின் முதல் நாடு கானா(Ghana) ஆகும் .உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி துறையான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா SII தயாரித்தது.இந்த தடுப்பூசி உற்பத்தித் துறையில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் கானா(Ghana) நாட்டிற்கு அனுப்பப் பட்டது.