Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எல்லா பக்கமும் அடிக்குறாரு…. “ஒரு குறையுமே இல்ல…. வேற லெவல் பேட்டிங்”…. யாருப்பா அது.!!

இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று புகழ்ந்து தள்ளி உள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா உடன் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக ஆடி வருகிறார். ஆனாலும் ஒரு சில முன்னால் வீரர்கள் இவரை தொடக்க ஆட்டக்காரராக இறக்குவது தவறு என்று கூறி வருகின்றனர். ஆனால் ரோகித் சர்மா தொடர்ச்சியாக இவரை தொடக்க ஆட்டக்காரராகவே களம் இறக்கி வருகிறார். முதல் இரண்டு போட்டிகளில் சரியான அளவில் ரன்களை குவிக்காத சூர்ய குமார் மூன்றாவது போட்டியில் சிறப்பாக ஆடி 44 பந்துகளை எதிர் கொண்டு 76 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்..

எனவே வருகின்ற 2 போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் தொடக்க ஆட்டக்காரராகவே களமிறங்குவார் என்று நன்றாக தெரிகிறது.. என்னதான் சூரியகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் அவரை நான்காவது இடத்தில் இறக்குவது தான் சரியாக இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

சூர்யகுமார் யாதவ் தனது இளம் வயதிலேயே கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தாலும், 31 வயதில் தான் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது.. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ள சூரியகுமார் தற்போது அசத்தி வருகிறார். டி20 உலக கோப்பை தொடரிலும் இந்தியாவின் முதன்மை வீரராக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தான் என்று சொல்ல வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான சில மாதங்களிலேயே ஐசிசி டி20 ரேங்கில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது அவரது திறமையை வெளிக்காட்டுகிறது.. வரும் ஆட்டங்களில் சிறப்பாக ஆடினால் அவர் முதலிடத்திற்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது  கருத்தை பதிவு செய்துள்ளார். அடிக்கடி கிரிக்கெட் பற்றி கருத்து கூறி வரும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சூர்ய குமார் யாதவ் பற்றி கூறியதாவது, சூர்யகுமார் யாதவின் வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இன்றியமையாததாக இருக்கிறது. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பைண்ட் லெக் திசையில் பிலிக் செய்யும் திறன் அவருடைய தனித்துவமான அடையாளமாக இருந்தது.

ஆனால் தற்போது பார்த்தால் மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் அவரால் வெவ்வேறு விதமான ஷாட்டுகளை ஆட முடிகிறது.. இவருக்கு எதிராக நல்ல வேகம், லைன், லென்த்தில் எப்படி பந்துவீச்சாளர்கள் பந்து வீசினாலும் அவரை பவுலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.. அந்த அளவிற்கு அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று புகழ்ந்து தள்ளி உள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்..

Categories

Tech |