திரிபுராவில் நடந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், 35 ஆண்டு காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த மண்ணில் ஆண்டு கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களின் அடையாளங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். அதை சகித்துக் கொள்வதற்குரிய பெருந்தன்மை மதவெறி கும்பல் இடம் இல்லை. திரும்புகின்ற திசையெல்லாம் ஸ்டாலின் படம். இப்போது இருக்கிற முதல்வர் சொல்கிறார்.
பிப்ளப் குமார் தேவே அவருடைய பெயர் முதலமைச்சர்…. அவர் சொல்கிறார் நாம் தொடர்ந்து 30 வருடமாக ஆட்சியில் இருக்க வேண்டும் என்றால் ஒன்றே ஒன்று செய்யுங்கள். வீட்டுக்கு வீடு விவேகானந்தர் படத்தை வையுங்கள். நாம் 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறோம் என்றார். அதை சொல்லிவிட்டு என்ன சொல்கிறார் என்றால் எந்தப்பக்கம் திரும்பினாலும் எந்த வீட்டைப் பார்த்தாலும் ஜோசப் ஸ்டாலின் படம் இருக்கின்றன, ஜோதிபாசு படம் இருக்கின்றன.
நிரூபன் சக்கரவர்த்தி படங்கள் இருக்கின்றன,அந்த மண்ணின் மைந்தர்களின் பூர்வீக குடிகளின் இல்லங்கள் தோறும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் படம் இருக்கிற வரையில் நம்மால் ஆட்சிக்கு வர முடியாது. வந்தாலும் அதை தக்க வைத்துக் கொள்ள முடியாது. தொடர்ந்து நீடிக்க முடியாது. எனவே குறைவாக பேசுங்கள், பொறுமையாக இருங்கள், வீட்டுக்கு வீடு விவேகானந்தர் படத்தை வையுங்கள். மதம் என்பதை எப்படி வீட்டில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்கு அவர்கள் முன்மொழிய கூடிய யுக்தி இது.
விவேகானந்தர் அதிதீவிர ஹிந்துத்வ வாதி. உலகமெங்கும் இந்துக்களின் கருத்துக்களைப் பரப்புவதற்கு சென்றவர். சகாதேவ் கருத்துகளில் நம்பிக்கை உடையவர். ஆனாலும் ராமகிருஷ்ண பரமஹம்சரை போல அல்லது தயானந்த சரஸ்வதி சுவாமிகளை போல சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்று விரும்பியவர். இந்து மதத்தை காப்பாற்ற வேண்டும், இந்த சமூக ஒழுங்கு சீர்குலைந்து கூட கூடாது. அதேநேரத்தில் இந்துக்களை ஒருங்கிணைப்பதற்கு சில சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்.
அப்படி சீர்திருத்தங்களை செய்வதற்காக அவர்கள் பாலியல் விவாதம் கூடாது என்ற கருத்துக்களை முன்வைத்து முன்மொழிந்த ராஜாராம் மோகன் ராய் போன்றவர்கள். ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி சுவாமிகள், பிரம்ம சமாஜத்தை நிறுவிய ராஜாராம் மோகன் ராய் இவர்களெல்லாம் சின்னச்சின்ன சீர்திருத்தங்களை முன்மொழிந்தவர்கள். ஆனால் அதி தீவிரமான சனாதன சக்திகள். விவேகானந்தரும் அந்த வழி வந்தவர்.
ராமகிருஷ்ணரின் பரமஹம்சரின் சீடர் என்று தன்னை அறிவித்துக் கொண்டவர். உலகமெங்கும் அந்த கருத்துக்களை பரப்பியவர். அவர்களுடைய படங்களை வீட்டுக்கு வீடு வையுங்கள். திரிபுராவில் பிஜேபியின் ஆட்சி 30 ஆண்டுகளுக்கும் மேல் நீடிக்கும். அவர்கள் நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் தோழர்களே என தெரிவித்தார்.