Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லா புகழும் எங்க மோடிக்கு தா…! ‘மரம் வச்சது ஒருத்தன், பழம் சாப்பிடுறது இன்னொருத்தன்’…. அப்படி இருக்கு நீங்க சொல்லுறது….!!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குமாறு பலமுறை அறிக்கை வாயிலாகவும், நாடாளுமன்ற அவைகளிலும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அப்போது மத்திய அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. பின்னர் திமுக உயர் நீதிமன்றத்தை நாடியது. அதன் பிறகு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. ஆனால் மத்திய பாஜக அரசு அதனை மதிக்கவில்லை. இதனால் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

அதன் பிறகே 27 % இட ஒதுக்கீடு வழங்குவதாக பிரதமர் அறிவித்தார். ஆனால் தற்போது அண்ணாமலை அறிக்கை ஒன்றில் “கடந்த 2015-ஆம் ஆண்டில் மத்திய அரசு, நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்தால் 27% இட ஒதுக்கீடு வழங்க தயாராக இருப்பதாக எழுத்துப்பூர்வமாக கூறியது. எனவே பாஜக அரசு தான் பிள்ளையார் சுழி போல் இருந்து தனது கொள்கையின் முடிவை எழுத்துப்பூர்வமாக கூறியுள்ளது.

ஆனால் தற்போது யார் யாரோ தங்களால் தான் இட ஒதுக்கீடு கிடைத்தது என பேசி கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது கொள்கை முடிவை எழுத்துபூர்வமாக அறிவித்ததால் தான் நீதிமன்றத்தின் அங்கீகாரத்துடன் 27 % இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. எனவே இந்த 27% இட ஒதுக்கீட்டில் முழு பெருமையும் பாஜகவுக்கு மட்டுமே உள்ளது. அதேபோல் நம் பிரதமர் மோடி தான் உண்மையான ‘சமூக நீதி காவலர்’ ( சௌகிதார் ) என்று அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |