பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கத்தில் நேற்று சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, “ஜன சங்கத்தின் தமிழக கிளையின் முதல் தலைவராக இருந்தவர் வி.கே. ஜான் என்ற கிறிஸ்தவர். இந்நிலையில் மற்ற மதத்தினரின் மத அடையாளத்தை ஏற்றுக் கொண்டால் தான் மதச்சார்பின்மை என்பதில்லை.
எந்த மதமும் இன்னொரு மதத்துக்கு தாழ்வில்லை என்பதை மதச்சார்பின்மை. அதேபோல் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு சொந்தமானது அல்ல பாஜக. மக்கள் ஒற்றுமையாக இருந்து போலி அரசியலை உடைக்க வேண்டும். இந்நிலையில் தமிழக முழுவதும் 234 தொகுதிகளுக்கும் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்துள்ளேன். இதனால் அனைத்து ஆலயங்களுக்கும் சென்றுவுள்ளேன்” என அவர் கூறியுள்ளார்.