கந்த சஷ்டி கவசத்தை இழிவாக கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அதில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், கந்த சஷ்டி கவசத்தை மிக கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாத படி செய்தவர்கள் மீது துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்குவதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மததுவேஷமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்…. ஒழியணும்.
எல்லா மதமும் சம்மதமே…!! கந்தனுக்கு அரோகரா…!!
#கந்தனுக்கு_அரோகரா pic.twitter.com/zWfRVpufXk
— Rajinikanth (@rajinikanth) July 22, 2020