இந்த 2 வீரர்களும் விராட் கோலியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாகவே இந்திய அணியின் விராட் கோலியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தால் பலரும் அவரை விமர்சித்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார் விராட் கோலி. குறிப்பாக ஆசியக் கோப்பை முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 35 ரன்கள் எடுத்தார்.. அதன்பின் ஹாங்காங் அணிக்கு எதிராக 59 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றிலும் 44 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சர் என 60 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.. இதனால் ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் விராட் கோலி இருக்கிறார்.. அவர் 3 போட்டிகளில் விளையாடி 77 ஆவரேஜுடன் 154 ரன்கள் குவித்து இருக்கிறார்..
இந்நிலையில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது விராட் கோலி ஆடியதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.. கோலி மிகச் சிறப்பாக பிரமாதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். அவரின் இந்த ஆட்டத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.. முதல் இரண்டு போட்டியிலும் நன்றாக விளையாடி பார்முக்கு திரும்பியதை சுட்டி காட்டி இருந்த கோலி மூன்றாவது போட்டியிலும் அட்டகாசமாக விளையாடினார்.
இந்தப் ஃபார்மை அவர் தொடர்ச்சியாக வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன்.. மேலும் பேசிய அவர் சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் எப்படி விளையாடி ரன்களை குவிக்க வேண்டும் என்பதை விராட் கோலியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். எப்போதும் உங்களால் பெரிய ஷாட்டுகளை அடிக்க முடியாது.. விராட் கோலி ஒன்று இரண்டு நன்களை ஓடி எடுக்கும் திறன் கொண்டவர். இதனால் தான் அவர் பெரிய பிளேயராக இருக்கிறார்.. அவர் ஒரு ரன் எடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு ரன்கள் சேர்ப்பதற்கு கூட ஓடுவதில் அதிக காட்டக் கூடியவர். எனவே இப்படி விளையாட நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்..