பதற்றமான வாக்குசாவடிகளை தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாவட்டத்தில் பதற்றமான வாக்குசாவடிகளை கண்டறிந்து பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பார்வையாளரும், தமிழ்நாடு மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனருமான இன்னசென்ட் திவ்யா தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதனையடுத்து பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார். மேலும் வாக்குசாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்குகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்றவற்றை முறையாக செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுத்தியுள்ளார். இந்த ஆய்வின் பொது ராசிபுரம் துணை சூப்பிரண்டு அதிகாரி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம், தேர்தல் அதிகாரி அசோக் குமார் ஆகியோர் உடனிருந்துள்ளனர்.