நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 3 துணை ராணுவப்படைகளை தேர்தல் உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதை முழுவதுமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், நேபாளம் என பல நாடுகளுடன் நாம் எல்லையை பகிர்ந்து கொள்கிறோம். இந்த எல்லைகளில் PSF எனப்படும் எல்லை பாதுகாப்பு படை, ITPP எனப்படும் இந்தோ தீபத் எல்லைப் போலீஸ்ப்படை, SSP எனப்படும் சாஸ்ஸத்ரா சீமாபல் போன்ற துணை ராணுவப்படைகளும் ஈடுபடுத்தப்படுகின்றனர். உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தேர்தல் போன்ற பணிகளிலும் இந்த எல்லை பாதுகாப்பு படைகள் ஈடுபடுத்தப்பட்டுகின்றனர்.
இந்நிலையில் இந்த நடைமுறையை மாற்றி எல்லைப் பாதுகாப்பு பணியில் மட்டும் இந்த துணை ராணுவ படைகளை ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளில் CRPF எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை மட்டுமே ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுயுள்ளது. எல்லைப் பாதுகாப்பு படைகள், எல்லைப் பாதுகாப்பு பணிகள் மட்டுமே ஈடுபடுத்தப்படும். பீகாரில் விரைவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் இருந்து இதனை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.