இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் சட்டவிரோதமான அத்துமீறல் செயலில் ஈடுபட்டதாக சீன தூதரகம் கூறியுள்ளது.
இந்தியா மற்றும் சீன படைகள் லடாக் எல்லையில் இருக்கின்ற கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் மோதலில் ஈடுபட்டன. அந்த மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் சீனா தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டது. கடந்த மாதம் 29ஆம் தேதி சீனா ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் கூறியது. இந்த நிலையில் இந்திய ராணுவம் தான் சட்டவிரோதமான அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்தியாவுக்கான சீன தூதரகம் கூறியுள்ளது.
இதுபற்றி இந்தியாவுக்கான சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ” பாங்காங் சோ பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீண்டும் சட்டவிரோதமான அத்துமீறல் செயலில் ஈடுபட்டுள்ளனர். சீனா இந்தியாவிற்கு உரிய தனித்துவமான அனைத்து பிரதிநிதித்துவங்களை யும் வழங்கியுள்ளது. முன்னணித் உறுப்புகளையும் கட்டுப்படுத்தி அதனை தடுக்க அறிவுறுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.