இந்தியாவின் எல்லையோரப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மூன்று இடங்களில் அத்துமீறிய தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.
இந்தியாவின் எல்லையோரத்தில் பாகிஸ்தான் ராணுவம் மூன்று இடங்களில் நேற்று அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது. கத்துவா மாவட்டத்தில் ஹீரா நகரில் சர்வதேச எல்லையில், மாலை 5 மணிக்கே காவல் நிலையங்கள் மற்றும் கிராமங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. அதனைப் போலவே சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் டாங்கிகள் மூலமாக ஷாபூர் பகுதியிலும், பூஞ்ச் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியிலும் திடீரென தாக்குதல் நடத்தியது.
அதனை சுதாகரித்துக் கொண்ட இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. ஆனால் அந்தத் தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த ஆண்டில் கடந்த அக்டோபர் மாதம் 6 ஆம் தேதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 3,589 முறை அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.