ஜம்மு-காஷ்மீரில் தன் மகனுக்குக் கருணை காட்டியதால் பயங்கரவாதியின் தந்தை ராணுவ வீரர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தனியாக சிக்கிய பயங்கரவாதி ஒருவர் இராணுவ வீரர்களின் அன்பு பேச்சால் மனம் மாறி தானாக முன் வந்து சரணடைந்துள்ளார். அவருக்கு ராணுவ வீரர்கள் தண்ணீர் கொடுத்து உதவியுள்ளனர். தன் மகனுக்குக் கருணை காட்டியதால் பயங்கரவாதியின் தந்தை ராணுவ வீரர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த உரையாடல் கூடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ராணுவ வீரர்கள், ஜஹாங்கீர் நீங்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை கைவிட்டு விட்டு எங்களிடம் சரணடையுமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
நீங்கள் மறைந்துள்ள இந்த இடத்தை நாங்கள் முழுவதுமாக சுற்றி வளைத்து இருக்கிறோம். உங்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாது. உங்கள் மீது துப்பாக்கிச்சூடு ஒருபோதும் நடத்தப்பட மாட்டாது என்று நாங்கள் உங்களுக்கு மனமார உறுதி அளிக்கிறோம். கடவுளை நினைத்து சரணடையுங்கள், உங்கள் குடும்பத்தின் நிலைமையை நினைத்து சரணடையுங்கள். எந்த வீரர்களும் உங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மாட்டார்கள். இந்தப் பக்கத்தில் வாருங்கள் என்று ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர். மேலும் வேறு யாராவது இருக்கிறீர்களா? வேறு ஏதேனும் ஆயுதம் உள்ளதா? என்று ராணுவ வீரர்கள் கேட்கிறார்கள். அதன்பிறகு பதுங்கியிருந்த பயங்கரவாதி தனது கால் சட்டை அணிந்து மறைவிடத்தில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது தயவுசெய்து அவருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள். உங்களுக்கு எதுவும் நடக்காது வாருங்கள் என்று ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர். அதன் பிறகு வெளியே வந்த பயங்கரவாதி பாதுகாப்பு பணி என்னை நோக்கி நடந்து வந்து அமைதியாக அமர்ந்துள்ளார். இதனைத்தொடர்ந்து பயங்கரவாதியின் தந்தை பாதுகாப்பு படையினரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளார். உங்கள் மகனிடம் சொல்லி வையுங்கள், அவர் ஒரு பெரிய நல்ல காரியம் செய்திருக்கிறார். அவர் கடந்த காலத்தில் செய்த தவறுகள் அனைத்தும் மறக்கப்படும். அவரை மீண்டும் தயவுசெய்து பயங்கரவாதிகளுடன் செல விடாதீர்கள் என்று ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர்.