இந்திய, சீன எல்லையில் நேற்று இரவு ரோந்து பணியில் இந்திய விமானப் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்தியா,எல்லைக்குட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் , கடந்த மாதம் 15-ம் தேதி சீன ராணுவர்கள் அத்துமீற முயன்ற போது ஏற்பட்ட மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ந்து சிலர் காயம் அடைந்துள்ளனர். சீனாவில் 35-க்கும் மேலான வீரர்கள் பலி ஆகியுள்ளனர். இதனால் எல்லையில் சீனா கூடுதலானா படைகளை குவித்திருந்தது. சீனாவை சமாளிக்க இந்தியாவும் தங்களது படைகளை பலப்படுத்தியதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனால் ராணுவ தளபதியான நரவானே சமீபத்தில் லடாக் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்ததை தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி லடாக் பகுதிக்கு சென்று எல்லையில் தயார் செய்துள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து விமானப்படை தரைப்படை இந்திய திபெத்திய பாதுகாப்பு படை உள்ளிட்டவற்றின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இதற்கிடையே எல்லையில் பதட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் போராடிய பின் எல்லையில் இருதரப்பும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டுள்ளன. எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் முன்னணியில் இருந்த சீன ராணுவர்கள் அங்கிருந்து சுமார் 2 கி.மீ தூரம் பின்னடைந்துள்ளனர். அதோடு தாங்கள் போட்டிருந்த கூடாரங்கள் முதல் தற்காலிக கட்டுமானங்கள் வரை அவர்கள் பிரித்து எடுத்துச் சென்றுள்ளனர்.
எனினும், லடாக் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பை இந்தியா தீவிர படுத்தி வருகிறது. இதைதொடர்ந்து நேற்று இரவு இந்திய சீன எல்லையில் ரோந்து பணியில் இந்திய விமானங்கள் மிக் -29, சுகோய் 30 எம்.கே.ஐ. அப்பாச்சி தாக்குதல் ஆகிய விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.