உக்ரைன் அரசு இந்திய மாணவர்களை ரயில்களில் ஏறவிடாமல் தடுத்ததாக எழுந்துள்ள புகரால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யாவின் முப்படைகளும், ரஷ்ய அதிபரின் உத்தரவுபடி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் இந்திய மாணவர்கள் தரப்பில் உக்ரேனியர்கள், எங்களை கார்கிவ் ரயில் நிலையத்தில் வரும் ரயில்களில் ஏற விடாமல் தடுப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து வசதி இல்லை என்றாலும், நடந்தாவது இந்தியர்களை கார்கில் பகுதியை விட்டு வெளியேறுமாறு, இந்திய தூதரகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இதனை அடுத்து கார்கில் பகுதியை விட்டு வெளியேறி பெசோசின், பாஃபாயி போன்ற நகரங்களில் தஞ்சம் அடையவும் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் அரசு நிற, இன பாகுபாடு எதுவும் காட்டவில்லை எனவும், எல்லையை கடப்பதற்கு யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக உக்ரைன் அரசு மீது எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் விளக்கமளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக மாணவர்கள் 300 பேர் உட்பட மொத்தம் 1000 இந்திய மாணவர்கள் கார்கிவ் ரெயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.