சுவிட்சர்லாந்துக்குள் எல்லை தாண்டி நுழைந்த சிறிய ரக விமானம் ஒன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் உள்ள calmar என்ற இடத்தில் நேற்று காலை விமான கட்டுப்பாட்டு மையத்துக்குள் கட்டுப்படாமல் சிறிய ரக விமானம் ஒன்று பறந்து வருவதாக பிரெஞ்சு அதிகாரிகள் சுவிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். அதற்குள் அந்த விமானம் எல்லையை கடந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்துள்ளது.
அப்பொழுது உடனடியாக vaud மாகாணத்திலுள்ள payerne-யிலிருந்து வேகமாக புறப்பட்ட சுவிஸ் விமானப்படையின் ஜெட் விமானங்கள் அந்த விமானத்தை Graubunden பகுதியில் மடக்கியுள்ளன. இதனை தொடர்ந்து அந்த விமானத்தின் விமானையே தொடர்பு கொண்ட சுவிஸ் அதிகாரிகள் அந்த விமானத்தை இத்தாலி விமான எல்லைக்குள் கொண்டு செல்ல விமானத்தின் விமானியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.