கர்நாடகா – மராட்டியம் இடையேயான பெலகாவி விஷயம் தொடர்பான எல்லை பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெலகாவியை அந்த மாநில அரசு சொந்தம் கொண்டாடி வருவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து முதல் மந்திரி ஏக் நாத் ஷிண்டே பேசிய போது, மராட்டியத்தில் எல்லை பகுதியை பாதுகாக்கும் பிரச்சனை சம்பந்தமாக அரசு உறுதியாக இருக்கிறது.
மேலும் மராட்டியத்தில் ஒரு அங்குல நிலம் கூட யாருக்கும் விட்டு கொடுக்கமாட்டோம். ஏனென்றால் இரு மாநில எல்லையில் பிரச்சனை தொடர்பான வழக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தற்போது வரை அந்த பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இதனையடுத்து மராட்டியத்தில் ஒரு கிராமம் கூட கர்நாடகாவிற்கு செல்லாது என அவர் தெரிவித்துள்ளார்.