உக்ரைனிய பிராந்தியங்களில் ராணுவ சட்டத்தை விதிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புதின் கூறியுள்ளார். உக்ரைன் உடனான போர் நடவடிக்கையில் உச்சகட்டமாக டொனட்ஸ், லுஹான்ஸ்க் மக்கள் zaporizhzhia மற்றும் kherson நான்கு கிழக்கு உக்ரைனிய நகரங்களை ரஷ்யா தனுடன் அதிகாரபூர்வமாக இணைத்து கொண்டதாக கிரெம்ளினில் நடைபெற்ற விழாவில் ரஷ்ய ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்த நிலையில் இதற்கு உக்ரைன் மற்றும் உலக நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தது இதனை அடுத்து ரஷ்யாவின் அறிவிப்பை அங்கீகரிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டு ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட நான்கு பகுதிகளிலும் ராணுவ சட்டத்தை அறிமுகப்படுத்துவதாக புதின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இதற்கு முன்பாக கைப்பற்றப்பட்ட பகுதிகளில் ரஷ்ய ராணுவ சட்டம் திணிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நாம் ரஷ்ய இராணுவ சட்டத்தின் கட்டமைப்பிற்குள் இந்த ஆட்சியை சட்டபூர்வமாக வேண்டும் என கூறியுள்ளார். மேலும் பாதுகாப்பு உறுதிப்படுத்த ஆக்கிரமிப்பு நிர்வாகங்களில் தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆவணங்கள் உடனடியாக கட்டமைப்பு கவுன்சிலுக்கு அனுப்பப்படும் என புடினின் முடிவை அங்கீகரிப்பது கூட்டமைப்பில் கவுன்சில் பொறுப்பாகும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் திமிட்டரி பெஸ்க்கோ பாதிக்கப்பட்ட பகுதிகளுடன் எல்லையை மூடும் திட்டம் ரஷ்யாவிடம் இல்லை என தெளிவுபடுத்தி உள்ளார்.