கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மேலும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஏற்கனவே ஒரு விசைப்படகுடன் மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு படகை சேர்ந்த 13 பேரை சிறை பிடித்துள்ளது.
2 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்ட நாகையை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.