Categories
மாநில செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் கைது…. இலங்கை கடற்படை அட்டூழியம்..!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடலுக்கு சென்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டி அடித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு விசைப்படைகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், அந்த படகுகளை சிறை பிடிக்க முயற்சி செய்தபோது, ஒரு படகு தப்பியது.. ஒரு படகை சிறை பிடித்த நிலையில் அதிலுள்ள 14 மீனவர்களை சிறை பிடித்துள்ளனர்.

தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டுள்ள 14 மீனவர்களையும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை  காரை நகர் முகாமிற்கு கொண்டு சென்றுள்ளது.  தற்போது 14 மீனவர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் இந்த 14 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி வழக்கு பதிவு செய்து நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்க இருப்பதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் ஒரு மீனவருக்கு மிகப்பெரிய அளவில் 90% கண்பார்வை இழந்துள்ள நிலையில், மீண்டும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது ராமேஸ்வரம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் தமிழக  மீனவர்கள் பிரச்சினை இல்லாமல் மீண்டும் பிடித்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. தற்போது சிறப்பிக்கப்பட்டுள்ள 14 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மீனவ குடும்பங்களின் கோரிக்கையாக உள்ளது.

Categories

Tech |