Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எல்லை தொடர்பான தகராறு…. முதியவருக்கு கத்திக்குத்து…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

முதியவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராம்நகர் பகுதியில் கூலி தொழிலாளியான சின்னசாமி(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன்(30) என்பவருக்கும் இடையே வீட்டின் எல்லை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மணிகண்டன் சின்னச்சாமியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் மணிகண்டன் சின்னச்சாமியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் காயமடைந்த சின்னசாமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஓசூர் டவுன் போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |