ஜப்பானின் எல்லைக்குள் சீன போர்க்கப்பல்கள் நுழைந்துள்ளதாக வெளியான செய்தி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரியதாக இருக்கும் சென்காகு என்ற தீவுகளுக்கு அருகில் சீன கப்பல்கள் 4 ஜப்பானின் கடலுக்குள் நுழைந்துள்ளது. இதனை ஜப்பானின் செய்தி நிறுவனமான Kyoda புதன்கிழமை அன்று வெளியிட்டுள்ளது. மேலும் இந்த 2021 ஆம் வருடம் நடந்த முதல் எல்லை மீறல் இதுதான் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் வருடத்தில் சீனாவின் கப்பல்கள் சில அதன் எல்லையை மீறியுள்ளதாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சீன கப்பல்கள் ஜப்பானின் எல்லைக்குள் நுழைந்ததாக 333 வழக்குகள் ஜப்பானால் பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும் அக்டோபர் மாதத்தில் சீன கப்பல்கள் ஜப்பான் கடலுக்குள் புகுந்து சுமார் 57 மணி நேரங்களுக்கு பின்பு தான் அங்கிருந்து வெளியேறியது. மேலும் ஜூலை மாதத்தில் சீன கப்பல்கள் ஜப்பானின் கடலில் 39 மணிநேரம் இருந்துள்ளது. Diaoyuido என்றும் தீவுகள் நீண்டநாட்களாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான மோதல்களுக்கு காரணமாக இருக்கிறது. மேலும் இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இத்தீவுகள் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டு கடந்த 1972ம் வருடம் ஜப்பானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை சட்டவிரோதமாக ஜப்பான் கைப்பற்றியுள்ளது என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது.