மத்திய பிரதேச மாநில பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் குஜராத்தைச் சேர்ந்த கிரிஷ் குமார் சோனி(67) என்பரை கடந்த அக்டோபர் 28ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்னை விட அவரது கணவர் 27 வயது மூத்தவர் ஆவார். இருவருக்குமே இது 2வது திருமணம். திருமணத்திற்கு பின் அப்பெண் குஜராத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் முதலிரவு அன்று வயதான கணவர் தன்னுடைய பிறப்புறுப்பு உட்பட தனது உடல் முழுவதும் கடித்து வைத்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.
இதனால் அந்த பெண் காயமடைந்துள்ளார். ஒவ்வொரு முறை உடலுறவில் ஈடுபடும் போதும் அவரின் கணவர் இதே போல கொடூரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனிடையில் அந்த கணவருக்கு வயது மூத்தோர் காரணமாக பற்கள் அனைத்தும் விழுந்துவிட்டன. இதனால் அவர் பல்செட் தான் பொருத்தியுள்ளார். அவரின் கொடூரத்தை அந்த பெண் எதிர்த்த போது இது குறித்து வெளியே சொன்னால் உனக்கும் உனது குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்படும் என மனைவியை மிரட்டி இருக்கிறார். இந்நிலையில் கணவரின் கொடுமையை தாங்க முடியாமல் கடந்த டிசம்பர் மாதம் அப்பெண் தப்பித்து சொந்த ஊரான இந்தூருக்கு வந்து அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மனைவி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கணவர் கடித்ததால் ஏற்பட்ட காயங்கள் தொடர்பான புகைப்படங்களைக் கண்டு திகைத்துள்ளார். இதனால் கணவரை உடனடியாக கைது செய்யும்படியும், அவரது பல்செட்டை பிடுங்கி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மனைவி புகார் கொடுத்ததை அடுத்து கடந்த டிசம்பர் 7ஆம் தேதி முதல் அவருடைய கணவர் தலைமறைவாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.