காட்டு யானை அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் திகினாரை கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் தோட்டத்திற்குள் புகுந்துவிட்டது. இதனையடுத்து காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மரக்கிளைகளை முறித்து தின்றுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் ஒன்று திரண்டு பட்டாசு வெடித்தும், சத்தம் போட்டும் காட்டு யானைகளை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மேலும் 50-க்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.