காட்டு யானைகள் ராகி, வாழை உள்ளிட்ட பயிர்களை மிதித்தும், தின்றும் நாசப்படுத்தியதால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவரபெட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தேவகானபள்ளி கிராமத்திற்குள் நுழைந்துவிட்டது. இன்னிலையில் காட்டு யானைகள் கிராமப் பகுதியில் முகாமிட்டு அங்குள்ள ராகி, வாழை உள்ளிட்ட பல ஏக்கர் பயிர்களை மிதித்தும், தின்றும் நாசப்படுத்தியது.
இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.