Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்லை மீறும் அட்டகாசம்…. முகாமிட்டுள்ள காட்டு யானைகள்…. அச்சத்தில் விவசாயிகள்…!!

காட்டு யானைகள் விவசாய நிலங்களை நாசப்படுத்தி வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேத்துப்பாறை, வெங்கலவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் பிரதான தொழிலாக விவசாயம் அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு விலங்குகள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இந்த காட்டு யானைகள் கிராம பகுதிகளில் முகாமிட்டு வாழை உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |