Categories
தேசிய செய்திகள்

எல்லோருக்கும் அக்கவுண்டில் 4000 ரூபாய் வரும்…. உங்க பேரு இருக்கானு உடனே செக் பண்ணுங்க….!!!!

பிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த தொகை மூன்று தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என்ற கணக்கில் வழங்கப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 9 தவணைகள் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் பத்தாம் தவணையாக 2000 ரூபாய் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வழக்கமாக ஒவ்வொரு தவணையும் 2000 ரூபாய் செலுத்தப்பட்டு வந்தாலும், குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு மட்டும் இந்த முறை 4000 ரூபாய் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பத்தாவது தவணை 2000 ரூபாய் மட்டுமே கிடைக்கும். இருந்தாலும் ஒன்பதாம் தவணைத் தொகை கிடைக்காதவர்களுக்கு மட்டும் ஒன்பதாம் தவணைத் தொகையும் சேர்த்து மொத்தமாக 4000 ரூபாய் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. உங்களுக்கு பணம் வருமா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பது பற்றி இதில் விரிவாக பார்க்கலாம்.

* பிரதமர் கிசான் இணையதளத்துக்கு (https://www.pmkisan.gov.in/) செல்லவும்.

* அதில் உள்ள Farmers Corner பகுதியை கிளிக் செய்யவும்.

* அதில் Beneficiary status பகுதியை கிளிக் செய்து ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், மொபைல் நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவிடவும்.

* இதன்பின் பெயர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

Categories

Tech |