தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால் மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் மக்கள் விதிமுறைகளை மீறுவதாக கூறி புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதில் அம்மா உணவகத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களின் வாழ்வதாரத்தை இழந்த ஏழை,எளிய மக்கள் மற்றும் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கும் அம்மா உணவகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இந்நிலையில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில், திருவெறும்பூர் தொகுதியில் “எல்லோருக்கும் உணவு” வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்து உணவு பொட்டலங்களை வழங்கினார். இதில் ஏராளமானோர் உணவுப் பொட்டலங்களை வாங்கி சென்றனர்.