தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில், “கொரோனா தடுப்புக்கான முன்னெடுப்புகளை போர்க்கால நடவடிக்கையாக அரசு மேற்கொண்டிருந்தாலும் இப்போரில் ஒவ்வொருவரின் கருத்துக்கும் செவி மடுக்கிறது. நாளை மாலை 5 மணிக்கு அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்து கடிதம் எழுதியிருக்கிறேன். நாம் அனைவரும் இணைந்து நம் மக்களைக் காப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.