டிடிவி தினகரனின் மகனின் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி 27.10.2021 தஞ்சை மாவட்டம் பூண்டியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தனது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தங்களது குடும்பத்தினரோடு கலந்து கொள்ளுமாறு தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம் எழுதியுள்ளார். அதில், “இதய தெய்வம் அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களான கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் வணக்கம்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற எனது அன்பு மகள் திருமணத்தைத் தொடர்ந்து வரும் 27.10.2021 புதன்கிழமை காலை 11 மணியிலிருந்து தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி வளாகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை தங்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். எதிர்பாராவண்ணம் அழைப்பிதழ் கிடைக்கத் தவறியிருந்தால் இதனையே எனது தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்திட அன்போடு வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.