Categories
அரசியல்

எல்லோரும் கொண்டாடுவோம்…. ராஜீவ்காந்தி பெயரை சொல்லி…. திமுகவை விமர்சிக்கும் ராமதாஸ்…!!!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய இரண்டு தினங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றியை கைப்பற்றியது. இதனால் எதிர்க்கட்சியினர் பணம் கொடுத்து திமுக தேர்தலில் வெற்றி பெற்றதாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக வெற்றியை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இணையதள பதிவில்,

“எல்லோரும் கொண்டாடுவோம்….
காந்தியடிகளின் பெயரைச் சொல்லி,
ராஜிவ் காந்தியின் சட்டத்தைச் சொல்லி
எல்லோரும் கொண்டாடுவோம்!!
காந்தி கனவு கண்டது கிராம சுயராஜ்யம்…
ராஜிவ் கொண்டு வந்ததுபஞ்சாயத்து ராஜ்யம்
இரண்டும் தழைத்து செழித்திடவே தமிழகத்தில்
ஜனநாயகம் கடுமையாக உழைக்கிறதே!

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 140 பதவி
ஒன்றியக் குழு உறுப்பினர் 1381 பதவி
இத்தனை பதவிகளையும் ‘ஒரு பைசா கூட
செலவின்றி வென்றிருக்கிறார்கள் என்றால்
ஜனநாயகம் ’ஓங்கி’ வளர்ந்து விட்டதாகத் தானே அர்த்தமாகும்!
இனி காந்தியின் கிராம சுயராஜ்ய கனவு நனவாகும்
ராஜிவ் காந்தியின் பஞ்சாயத்து ராஜ்யம் செழிக்கும்
ஆகவே இன்னொருமுறை எல்லோரும் சொல்லுங்கள்…
‘காந்தி, ராஜிவ் பேரைச் சொல்லி எல்லோரும் கொண்டாடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |