தமிழ் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.
இந்நிலையில் மேயாதமான், மெர்குரி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை இந்துஜா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டார். மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும், வெளியே செல்ல நேர்ந்தால் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.