பரதேசி, ஈட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அதர்வா. இதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் அதர்வா, தான் நடித்துள்ள பட்டத்து அரசன் திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர், ‘உங்களுக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளதா’ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அதர்வா, “எனக்கும் காதல் அனுபவங்கள் இருக்கிறது. ஆனால் எல்லோர் வாழ்க்கையிலும் வந்துபோவதுபோல் சகஜமான ஒன்றுதான். பெரிய அனுபங்கள் என்று இதுவரை எதுவும் இல்லை” என கூறினார்.