இந்தியாவில் அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் மிக முக்கியமான ஒன்று வாட்ஸ்அப் ஆகும். ஆரம்ப கட்டத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் ஆடியோ மற்றும் வீடியோ போன்றவற்றை பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமே whatsapp பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நாளடைவில் மக்களின் விருப்பத்திற்கு தகுந்தாற்போல் புதிய புதிய வசதிகளை இணைத்து அப்டேட் செய்யப்பட்டது. அதாவது சமீபத்தில் குழுவாக சேர்ந்து கால் பேசும் குரூப் கால் வசதியும், அனுப்பும் செய்திகளை ஒரு தடவை மட்டுமே பார்த்ததும் அழித்துவிடக் கூடிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
அது மட்டுமல்லாமல் யு.பி.ஐ பயன்படுத்தி மற்றவருக்கு பணம் அனுப்பவும், மற்றவரிடம் இருந்து பணம் பெறுவதற்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது இதில் ஆயுள் காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி சேவைகளும் சேர்ந்துள்ளது. அதாவது இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இருந்து எல்.ஐ.சி பதிவு செய்த பாலிசிதாரர்கள் அனைவரும் அந்த நிறுவனத்தின் whatsapp செயலியை பயன்படுத்திக் கொள்ளமுடியும். பிரீமியம் ஸ்டேட்மென்ட், பாலிசிதாரர்கள் யு.எல்.ஐ.பி பிளான், ஸ்டேட்மெண்ட் லோன், ஃப்ரீ கொட்டேஷன் மற்றும் போனஸ் இன்பர்மேஷன் மற்றும் பல எல்.ஐ.சி சேவைகளை வாட்ஸ் அப்பில் சேட் பாக்ஸின் மூலமாக பெற முடிகிறது. இந்த வசதி தங்கள் வாட்ஸ் அப்பில் பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் தங்கள் வாட்ஸ் அப்பில் இருந்து 8976862090 என்ற எண்ணிற்கு Hi என்ன மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன் பின் எல்.ஐ.சி சேட் பாக்ஸ் உதவியை கொண்டு அதன் அனைத்து சேவைகளையும் உங்களால் பெற முடிகிறது.
எல்.ஐ.சி சேவைகளை வாட்ஸ் அப்பில் பெறுவதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் இதோ.
1. 89 76 86 20 90 என்ற எல்ஐசி யின் அதிகாரபூர்வ வாட்ஸப் நம்பரை உங்கள் காண்டாக்ட் சேவ் செய்து கொள்ள வேண்டும்.
2. அதன்பின் ஹாய் என்று எல்ஐசியின் சேட் பாக்ஸில் மெசேஜ் செய்ய வேண்டும்.
3. உடனடியாக whatsapp 11 தேர்வுகள் அடங்கிய தானியங்கி ரிப்ளை மெசேஜ் உங்களுக்கு அனுப்பும்.
4. அதில் நீங்கள் விரும்பிய சேவையை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
5. உடனடியாக உங்களுக்கு தேவைப்படும் அனைத்து தரவுகளும் அதிலிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ள முடிகிறது. மேலும் இவை அனைத்தையும் பெற வேண்டும் என்றால் முதலில் உங்களது whatsapp எண்ணை எல்.ஐ.சி அதிகாரப்பூர் வலைதளத்தில் இருந்து பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் நினைவு வைத்திருக்க வேண்டும்.