Categories
தேசிய செய்திகள்

எல்.பி.ஜி சிலிண்டர் மானியம்…. உங்களுக்கு கிடைக்கவில்லையா….? அப்ப உடனே இதை செய்யுங்க….!!!

சிலிண்டர் மானியத்தை எப்படி சரிபார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கொரோனா காலத்திற்கு பிறகு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைந்தவர்களுக்கு சிலிண்டருக்கு மாதம்தோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியமானது கெரோனா காலத்திற்குப் பிறகு வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது மீண்டும் சிலிண்டர் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைந்தவர்களுக்கு ரூபாய் 200 வரை மானியம் வழங்கப்படும். இந்த மானியமானது ஒரு சிலிண்டருக்கு‌ 72.57 மட்டும் கொடுத்ததாகவும், சிலருக்கு 158.52 ரூபாய் அல்லது 237.78 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மானியம் ஆனது வங்கி கணக்கில் வந்துவிட்டதா என்பதை வங்கிக்கு சென்று பார்த்துக் கொள்ளலாம். இல்லையெனில் அதிகபரப்பூர்வ இணையத்திற்கு சென்றும் மானியத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.

Categories

Tech |