நடிகர் சிம்பு மாநாடு படப்பிடிப்பின் இடையே மண் தரையில் படுத்து உறங்கிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் மாநாடு, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
Actors life!!! Man of simplicity!!! #nightshoot #Maanaadu in between shots!! @SilambarasanTR_ @iam_SJSuryah #candidshot pic.twitter.com/rCtrpD97cV
— venkat prabhu (@vp_offl) April 3, 2021
தற்போது சென்னையில் உள்ள ஈவிபி சிட்டி ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே நடிகர் சிம்பு மிகவும் எளிமையாக மண் தரையில் படுத்து உறங்கிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படங்களை இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.