Categories
மாநில செய்திகள்

எளிமையான மொழியில் சட்ட நூல்கள் தேவை …!!

சட்டப் புத்தகங்களில் உள்ள சட்ட விதிகள் குறித்த விவரங்களையும் மத்திய அரசின் புதிய உத்தரவுகள் அறிவிப்புகளையும் அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான ஆங்கிலத்தில் வெளியிட உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கும் இந்திய பார் கவுன்சிலுக்கும் உத்தரவுவிட்டுள்ளது.

வழக்கறிஞர் சுபேஸ், விஜயராவ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் நீதித்துறையை சட்டங்கள் விதிகள் குறித்து விவரிக்கும் சட்டப் புத்தகங்கள் அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான ஆங்கிலத்தில் அல்லது வட்டார மொழிகள் இருக்க வேண்டும். அப்போது தான் சாதாரண மனிதனும் சட்டம் மற்றும் நடைமுறைகளை புரிந்து கொண்டு தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கவும் குறைகளையும் நிவர்த்தி செய்வதற்கும் உதவியாக இருக்கும். இதேபோல் மத்திய அரசு வெளியிடும் புதிய உத்தரவுகள், அறிவிப்புகள், தகவல் தொடர்புகளும் அனைவருக்கும் புரியும் எளிமையான ஆங்கிலத்தில் அல்லது வட்டார மொழிகளில் இருந்தால் தான் சாதாரண மக்களும் அவற்றை சிரமமின்றி புரிந்து கொள்ள முடியும். அத்துடன் நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளிலும், சட்ட பல்கலைக்கழகங்களிலும், எளிமையான ஆங்கிலத்தில் சட்ட தேர்வுகள் நடத்த வேண்டும்.

அப்போதுதான் சட்ட மாணவர்கள் சட்ட ஆவணங்களையும், துல்லியமாகவும், சுருக்கமாகவும் உருவாக்க முடியும். நீதிமன்றங்களில் வழக்கு விவாதங்களின்போது தாக்கல் செய்யப்படும் வழக்கு குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்களின் பக்கங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் வழக்கு விசாரணையின் இருதரப்பு விவாதங்களில் நேரத்தை குறைக்கவும் உத்தரவிட வேண்டும். வழக்கு விசாரணையின் விவாதங்கள் அதிக நேரம் நீடிப்பதால் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் நேரமும் சக்தியும் வீணாகிறது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எ. பொப்டி மூத்த நீதிபதிகள் எ.எஸ் ஓவன்னா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக மத்திய சட்டத்துறை இந்திய பார் கவுன்சில் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Categories

Tech |