உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டெருமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். நேற்று முன்தினம் பெர்ன்ஹில் ரயில்வே விருந்தினர் மளிகை அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டெருமை படுத்து கிடந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டெருமையை பார்வையிட்டனர்.
அப்போது எழுந்து நடக்கவோ, எழுந்து நிற்கவோ முடியாமல் காட்டெருமை சிரமப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, காட்டெருமைக்கு காயம் எதுவும் இல்லை. வயது மூப்பு காரணமாக சோர்ந்து காணப்படும் காட்டெருமைக்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.