சென்னையில் தேர்வுக்கு செல்வது தொடர்பாக தனது தாயிடம் சண்டையிட்ட 11ஆம் வகுப்பு மாணவன் திடீரென மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமி என்பவர் கணவரை பிரிந்து தனது 15 வயதுடைய மகன் ஹரிஷ் உடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் காலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்பிய அவர், காலாண்டு தேர்விற்கு செல்வதற்கு தாமதமானதாக கூறி மகனை கண்டித்துள்ளார். அதனால் கடுப்பான மாணவன் பரீட்சைக்கு செல்ல மாட்டேன் என்று சண்டையிட்டுள்ளார். பின்னர் திடீரென அவர் மூன்றாவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதனால் பலத்த காயம் அடைந்த ஹரிஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.