எழும்பூர் கண் மருத்துவமனையில் ஆறு மாடி கட்டிடத்தில் முதல்வர் திறந்து வைத்தது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ள எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 200 வது ஆண்டை முன்னிட்டு இந்த மருத்துவமனை வளாகத்தில் 65.60 கோடி செலவில் 6 மாடி கட்டிடம் கட்டப்பட்டு இருக்கின்றது. இந்த மருத்துவமனையில் 150 படுக்கை வசதிகள், புறநோயாளிகள் பிரிவு அவசர சிகிச்சை போன்று சிறப்பு கண் சிகிச்சைக்கு தனித்தனி அரங்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதனை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் காஞ்சிபுரம் மருத்துவமனையில் டெலி கோபால்ட் எந்திரம், கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தீவிர மூளை காய்ச்சல் நோய்க்கான ஆய்வகம் மற்றும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நோயாளிகளின் பயன்பாட்டிற்காக 18 மின்தூக்கிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்தில் துணை செவிலியர் பயிற்சி பள்ளி கட்டிடம் உள்ளிட்ட மருத்துவத் துறை கட்டிடங்களை திறந்து வைத்தார். மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மொத்தம் 65 கோடியே 45 லட்சம் மதிப்பிலான மருத்துவ சேவை ஊர்திகள் மற்றும் நவீன மருத்துவ கருவிகளை அரசு மருத்துவமனைகளில் பயன்பாட்டிற்காக முதல்வர் வழங்கினார் என தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.