Categories
மாநில செய்திகள்

“எழும்பூர் ரயில் நிலையம் அன்று போல் இன்று இல்லை”…? தெற்கு ரயில்வே ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு…!!!!!

எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாள பகுதிகளில் மழைநீர் தேங்கி ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கமாகி கொண்டிருந்த நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணியால் நிலைமை மேம்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ பிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தும் தண்டவாளங்களில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இது பற்றி ட்விட்டர் பதிவில் வீடியோவுடன் தகவல் கூறப்பட்டிருக்கிறது.

இதனால் தண்டவாள பகுதிகளில் மழைநீர் தேங்காாமல் வழக்கம்போல் ரயில்கள் அனைத்தும் அதன் வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் ஒன்றிணைந்து இதர ரயில் நிலையங்களிலும் பணியாற்றுவோம் என்று நம்புவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் நன்றி சென்னை மாநகராட்சி இதுபோல தண்ணீர் தேங்கும் பிரச்சினை இருக்கும் ரயில் நிலையங்களிலும் ஒன்றிணைந்து செயல்பட்டு விரைவில் தீர்வு காண வேண்டும். மேலும் மழைக்காலங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படாத விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த திட்டப்பணியில் நெடுஞ்சாலை துறையும் இணைந்து உதவி செய்துள்ளது எனவும் அவர்களுக்கும் நன்றி என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |