செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரியிடம், “சசிகலா இணைப்பு தொடர்பான விவகாரத்தில் பிரதான உறுப்பினர் ஓ பன்னீர்செல்வம் பேசியது தவறு இல்லை என்று ஜே சி பி பிரபாகர் கூறியுள்ளார். இதே கருத்தை செல்லூர் ராஜுவும் கூறியுள்ளார்”என்று கேள்வி கேட்டனர். அப்போது ஜெயக்குமார், “நாங்கள் என்ன கூறுகிறோம் என்றால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு முடிவு ஏற்றப்பட்டது.
பொதுக்குழுவில் சசிகலா சார்ந்தவர்களை நீக்கிவிட்டோம். அதேபோல தலைமை கழகத்தில் கூட்டம் போட்டு மாவட்ட செயலாளர்கள் அதைப்போன்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் போட்டு சசிகலாவோடு யார் தொடர்பு வைத்தாலும் நீக்கி விடுவோம் என்று சொல்லி இருக்கிறோம். அதுவும் பண்ணுனோமா இல்லையா அதில் எல்லாரும் சேர்ந்து தான கையெழுத்து போட்டார்கள். அது ஒன்று. ஒவ்வொரு மாவட்டத்திலும்…. நான் சார்ந்திருக்கின்ற வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர்களிடையே கூட ஒரு கூட்டம் நடத்தினோம்.
தமிழ்நாட்டில் இருக்கின்ற கட்சி மாவட்டங்கள் எல்லா மாவட்டத்திலும் தீர்மானம் போட்டு எந்த காரணத்தைக் கொண்டும் திருமதி சசிகலாவும் அவர்களை சார்ந்தவர்களும் அவரோடு தொடர்பு வைத்தால் ஒழுங்கு நடவடிக்கை உட்படுத்தப்படுவர்கள். சிலரை நீக்கிவிடுவோம். அவர்களை நீக்கி ஒரு இறுதியான முடிவு எட்டப்பட்டது. அதுதான் நேற்றும் நிலை இன்றும் நிலை நாளையும் நிலை.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் ரத்தம் சிந்தி வியர்வை சிந்தி ஒவ்வொரு தொண்டன் அவனுடைய தியாகத்தால் உருவாக்கின இயக்கம் மாபெரும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம்.
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் எத்தனை சோதனை 72ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கும் போது அன்றைக்கிருந்த திராவிட முன்னேற்ற கழக தலைவராலும் அரசாங்கத்தாலும் அன்றைக்கு துன்புறுத்தலுக்கு ஆளாகி அப்படி எல்லாம் கட்சியை வளர்த்தவர்…
எத்தனையோ பேர் உதயகுமார் போன்றவர்கள், அதேபோன்று வத்தலக்குண்டு ஆறுமுகம் போன்றவர்கள் பூலாவரி சுகுமாரன் போன்றவர்கள் எண்ணற்ற தியாகிகள் இரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம் அப்படிப்பட்ட இயக்கம் இன்றைக்கு இரும்பு கோட்டையாக இருக்கின்றது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரும்பு கோட்டையாக இருக்கின்றது. இந்த இரும்பு கோட்டையை எந்த கரையான்கள் நினைத்தாலும் அதை அழிக்க முடியாத இரும்பு கோட்டையாகத் தான் இன்னும் நூறாண்டு காலம் இருக்கும் எவன் நினைத்தாலும் அழிக்க முடியாது என பேசினார்.