இந்தியாவில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரத்தை நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
உலகிலேயே மிகவும் உயரமான மற்றும் புகழ்பெற்ற இடமாக எவரெஸ்ட் சிகரம் உள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் மலை ஏறுபவர்கள் அனைவருக்கும் எவரெஸ்ட் சிகரம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை கடந்த சில நாட்களுக்கு முன் நீக்கப்பட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியது.
மேலும் மொத்தம் 8.848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டது குறித்து நேபாள அரசு அறிவிப்பு வெளியிடும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தின் புதிதாக கணக்கிடப்பட்ட உயரம் 8848.86 மீட்டர் என்று நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் மாறியதா என்பதை அறிய, புதிய உயரத்தை கணக்கீடு செய்யும் பணி கடந்த ஓராண்டாக நடந்து வந்தது. மேலும் 1954 ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8.848 மீ என இந்திய நில அளவை துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.