Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் சோக சம்பவம்..!!

பெரம்பலூரில் இளம்பெண் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அயன்பேரையூர் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு மோனிஷா என்ற மகள் இருந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மோனிஷா இருவரையும் தகராறு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார். இருப்பினும் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையில் இருந்த மோனிஷா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின் அங்கிருந்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |