பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் வாகனங்களை முக கவசம் அணியாமல் ஓட்டி சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் துரைராஜ் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைக்கக்கூடாது என்று கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து விதிமுறைகளை மீறி கடைகள் இயக்கப்பட்டால் கடைகளுக்கு “சீல்” வைக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். அந்த ஆய்வின் போது கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், குன்னம் போலீஸ் ஏட்டு குமார் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் வாகனங்களை நிறுத்தி முககவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதித்தனர்.