Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொல்லியும் கேட்க மாட்றாங்க… அவங்களால எங்களுக்கும் வந்துரும்…பொதுமக்களின் போராட்டதால் பரபரப்பு…!!

கொரானா தொற்று அதிகமாக இருப்பதால் தொழிற்சாலையை மூடகோரி  பொதுமக்கள் சாலை மறியலில்  ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அங்கு பணிபுரியும் 69 பணியாளர்களுக்கு சோதனையின் முடிவில் கொரானா தொற்று இருப்பது  உறுதியானது. இதன்காரணமாக வருவாய்த்துறையினர் ஊத்துக்குளி பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளனர். ஆனாலும் தொழிற்சாலைகள் இயங்கிவந்ததால்  பொதுமக்கள் ஈரோடு – முத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி தகவலறிந்த மொடக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்கள் இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலைசெய்வதாகவும் அதில் 69 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஊத்துக்குளி பகுதியில் தொழிலாளர்கள் எத்தகைய அச்சமும் இன்றி சர்வ சாதாரணமாக நடமாடுவதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு  கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே தொழிற்சாலை நிர்வாகத்திடம் இதுகுறித்து தெரிவித்தபிறகும் அவர்கள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதலால் அந்த தொழிற்சாலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் தொழிற்சாலையை மூட சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம் என பொதுமக்கள் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.  இதனையடுத்து காவல்துறையினர் இந்த விவகாரம் குறித்து  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு பொதுமக்கள்  போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |