Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி பண்ணுவான்..! விரட்டி பிடித்த பொதுமக்கள்… கைது செய்த காவல்துறை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளவாய்பொட்டல் பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சந்தைப்பேட்டை பகுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரவிக்குமார் சட்டையில் இருந்த ரூ.450-ஐ அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பறித்து விட்டு தப்பி ஓட முயற்சி செய்தார்.

அதனை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் தெற்கு காவல் நிலையத்தில் அவரை விரட்டி பிடித்து ஒப்படைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் காளையார்கோவில் ரஸ்தா பகுதியில் வசித்து வரும் அசோக்குமார் என்று தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |