பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்திற்குட்பட்ட ஜாஞ்சர்பூரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி Additional District and Sessions Court Judge அவினாஷ்குமார் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி கொண்டு இருந்துள்ளார். அப்போது நீதிமன்றத்தின் விசாரணை அறைக்குள் நுழைந்த கோகர்திஹா காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்று உதவி ஆய்வாளர் ஆகியோர் நீதிபதி அவினாஷ்குமாரை தாக்கி உள்ளனர். அவரை நோக்கி துப்பாக்கியை காட்டியும் மிரட்டி உள்ளனர்.
இதனால் அங்கு இருந்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதியை காப்பாற்ற முயன்றபோது அவர்கள் மீது காவலர்கள் இருவரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். நீதிபதி மீதான தாக்குதலுக்கு ஜாஞ்சர்பூரி வழக்கறிஞர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், நீதிபதியை தாக்கிய ஆய்வாளர் கோபால் பிரசாத் மற்றும் உதவி ஆய்வாளர் அபிமன்யு குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.